ஏழை விவசாயிகளின் முன்னேற்றம்!
நமக்கு தேவை இன்னொரு பசுமை புரட்சி !!!
எப்படி சாத்தியம் ????
நீர் மேலாண்மை.....
ஆம் நமக்கு தேவைக்கு அதிகமாகவே இயற்கை நீர்வளம் உள்ளது ஆனால்,
ஏன் வருடத்தில் ஒரு போகம் மட்டுமா விவசாயம் செய்ய முடிகிறது?
ஏன் ஆழ்துளை கிணறுகள் 700 அடியிலும் நீர் இன்றி காய்ந்து விட்டன ?
ஏன் பருவ மழை போதிய அளவு பெய்வதில்லை ?
ஏன் ஆறுகள் கண்மாய்கள் நீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன?
ஏன் கிணறுகள், ஏரிகள் குளங்கள் வறண்டு கிடக்கின்றன?
எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணம் !!!!!!!!!!!!
இதோ....
நம்முடைய நீர் பிடிப்பு பகுதிகள் எத்தனை சதவீதம் ஆக்கிரமிக்கபடாமல் உள்ளன??
அப்படியே இருந்தாலும் அதன் ஆழம் எவ்வளவு??
அதற்கும் நீர் வரும் கலவைகள் சரியாக உள்ளனவா?
மழை வர உதவி புரியும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
மூன்று போகம் நீர்பசன்த்திற்கு தேவையான ஏரிகளின் இன்றைய நிலை என்ன?
ஒன்று ஆக்கிரமிப்புகளால் சுருங்கி விட்டது , இல்லை மண் அரிப்பினால் மேடாகிவிட்டது?
என்ன செய்ய வேண்டும்..
முதலி ஏரி குளங்கள் ஆழப்படுத்த வேண்டும் ( 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மக்களால் ஆழப்படுத்தும் பணியினால் ஒரு சதவீதம் கூட பயன் இல்லை)
ஏரியின் கீழ் இருக்கும் நிலங்களின் பரப்பளவுக்கு மூன்று போகம் நீர்பாசனம் செய்ய தேவைப்படும் அளவுக்கு ஏரிகளின் கொள்ளளவு உயர்த்தப்பட வேண்டும்.
மேலும் நீர் வரத்து கால்வாய்கள் சரியான முறையில் அம்மைக்க வேண்டும்.
ஏரியில் இருந்து வெளியேறும் கால்வாய்களும் சீரமைக்கப்பட வேண்டும்.
விவசாயிகள் அனைவருக்கும் நீர் மேலாண்மை பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
புதிய சொட்டு நீர் பாசனம் போன்ற முறைகளை விவசாயிகள் செய்ய பயிர்க்கடன் மற்றும் அரசினால் அளிக்கப்பட வேண்டும்.
பயிர் சுயற்சி முறை கட்டாயமாக பின் பற்றப்பட வேண்டும்.
ஏரிகள் பசனைதை சீரமைப்பதன் மூலம் விவசாயிகளின் இலவச மின்சாரம் வீணாகாது
மேலும் ஏரிகளில் மீன் வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
விவசாய வேலைகள் இல்லாத நாட்களில் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்?
விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களின் முக்கித்துவம் இன்றியமையாதது, நடவு களை எடுத்தல் போன்றவற்றிற்கும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
சீரான கால்வாய்கள் அமைக்க வேண்டும் .
ஏரிகளை சுற்றி மரங்கள் நடவேண்டும் இதனால் கரை பலப்படுவதோடு மான் அரிப்பும் தடுக்கப்படும் மற்றும் மழை வார இவை பெரிதும் உதவும்.

