Friday, May 21, 2010

Super Power India -01

நமது நாட்டில் மற்ற வளர்ந்த நாடுகளைப்போல் எல்லா வசதிகளும் உள்ளன ஆனால் அவை தரமற்றவையாக உள்ளதே இன்றைய பெரும் பிரச்சினை.

வளர்ந்த நாடுகளைப்போல் நம் நாட்டில் இலவசமாக அல்லது மலிவு விலையில் கிடைப்பவை
அ) கல்வி
ஆ) மருத்துவம்
 இ) உணவு பொருட்கள் (நியாய விலைக்கடை
ஈ) வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை மையங்கள்

ஒவ்வொன்றாக பார்ப்போம்
கல்வி
முதல் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி செல்வோம், அப்பொழுது படித்தவர்கள் எல்லாம் அரசு பள்ளிகளில் தான் பயின்றார்கள், ஏன் அப்துல் கலாம் கூட அரசு பள்ளியில் தான் படித்தார்,

இடையில் வந்ததுதானே இந்த தனியார் கல்வி கூடங்கள்.

நாம் ஏன் மறுபடியும் இந்த பள்ளிகள் அனைத்தையும் அரசுடமையக்கக்கூடாது?
அல்லது அரசு பள்ளிகளின் தரத்தை இந்த கல்வி நிறுவனங்களை விட சிறப்பாக மாற்றிட அரசால் முடியாதா?
சில அல்லது பல பெரும் பண முதலைகளின் நன்மைக்காக நம் அரசு ஒட்டு மொத்த மக்களின் நன்மைகளையும் குழி தோண்டி புதைக்கின்றதே இது நியாயமா?

மருத்துவம்
மேலே சொன்னவைகளில் கல்வி என்ற சொல்லுக்கு பதிலாக மருத்துவம் என்று வாசிக்கவும் ....
திரும்பவும்
சில அல்லது பல பெரும் பண முதலைகளின் நன்மைக்காக அரசு ஒட்டு மொத்த மக்களின் நன்மைகளையும் குழி தோண்டி புதைத்து பல நாட்கள் ஆகின்றன.


ஊழல் - லஞ்சம்
இந்திய ஜன நாயகத்தின் சாபக்கேடு

எங்கு பார்த்தாலும் ஊழல் லஞ்சம் என்று கேள்வி கேட்பவர்களுக்கு என்னுடைய பதில் ....

பல லட்சம் லஞ்சம் கொடுத்து அரசாங்க பணியில் சேரும் ஒருவன் காசு வாங்காமல் வேலை செய்ய வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

காசு யார் வாங்குவது , நாம் காசு வாங்கி MLA, MP,  அமைச்சர் களாக ஆன மாண்புமிகு தலைகள் மற்றும் அவர்களின் அல்லக்கைகள் தான்

அப்படியே காசு கொடுக்காமல் காசு வாங்காமல் வேலை செய்யும் நல்லவர்களையும் நாம் விட்டட்லும் இவர்களிப்போன்ர அல்லக்கைகள் விடுவதில்லை.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் நம் மஞ்சள் நிறத்தி வெளிவராத வெள்ளை பத்திக்கைகள் .....

எந்த கட்சி ஆட்சி நடத்துகிறதோ அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்கள் ...........

நல்ல ஜனநாயகம்........

No comments:

Post a Comment