நேற்று நானும் என் நண்பர்களும் எங்கள் நகரத்திலிருந்து சற்று தொலைவில் (அரை மணி நேர பயண தூரத்திலுள்ள) ஒரு சிறு மலைக்கு செல்ல முடிவு செய்தோம்.
நங்கள் மூன்று பேர் என்னிடம் 3 பயணச்சீட்டு இருந்தது .
இங்கு பயணச்சீட்டு வெளியில் உள்ள கடைகளில் கிடைக்கும் - TABACHI என்று பெயர் நம்ம ஊர் பெட்டி கடை போல இங்கு எங்கு பார்த்தாலும் இருக்கும் அணைத்து விதமான மது வகைகள், குளிர்பானங்கள், லாட்டரி சீட்டுகள், புகையிலை வகைகள் ரயில் மற்றும் bus டிக்கெட்டுகள் கிடைக்கும்.
ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலும் இந்த Tabachi தவிர மற்ற கடைகள் மூடியே இருக்கும் - Shopping on Sunday - இங்கு இல்லவே இல்லை.
வார நாட்களில் 8 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கும் .
நம்முடைய கதைக்கு வருவோம் ,
நங்கள் 3 மணிக்கு புறப்பட்டோம், அந்த நேரம் ஞாயிற்று கிழமை என்பதால் பெரும்பான்மையான கடைகள் மூடியே இருந்தன , மேலும் 3 மணி வேறு வழக்கமான Tabachi கூட மூடி இருந்தது, நாங்களும் அருகில் உள்ள அணைத்து கடைகளிலும் கேட்டு பார்த்தோம் ஏங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை , பிறகு என்னிடம் இருந்த டிக்கெட் உடன் bus இல் ஏறி பயணம் செய்தோம். 1.20 EURO மதிப்புள்ள அந்த டிக்கெட் மூலம் 90 நிமிடத்திற்கு எந்த பேருந்திலும் பயணம் செய்யலாம், முதல் பேருந்தில் ஏறும்போது பயணச்சீட்டை validating machine இல் punch செய்ய வேண்டும். அங்கே மலைக்கு மேல் டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புறப்பட்டோம் .
மலையை சுற்றி பார்த்துவிட்டு திரும்பி வருவதற்கு , பயணசீட்டு வாங்க ஒரு கடைக்கு சென்றோம் அங்கும் டிக்கெட் இல்லை , அனைத்தும் தீர்ந்து விட்டது, அவர்கள் பேரூந்து ஓட்டுனரிடம் 1.50 EURO கொடுத்தால் டிக்கெட் கிடைக்கும் என்றார்கள், அங்கும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது , அன்றைக்கு நேரம் அவரிடமும் பயணசீட்டு இல்லை.
பயணசீட்டு இல்லாமல் எப்படி பயணம் செய்வது, TC இடம் மாட்டினால் 55 Euro அபராதம், வேறு வழி மாட்டினால் 165 Euro கட்டுவது என்று எண்ணி பேரூந்தில் அமர்ந்து விட்டோம் , எங்களைப்போலவே ஒரு ஆப்ரிக்கா பெண்ணும் வந்து ஏறினால் இப்பொழுது கொஞ்சம் நிம்மதி துணைக்கு ஆல் கிடைத்துவிட்ட சந்தோசம்.
நங்கள் இது வரை பல முறை பயணம் செய்துள்ளோம் பெரும்பாலும் இங்கு உள்ள மக்கள் TC கண்முன் தெரிந்தால்தான் டிக்கெட் Punch செய்வார்கள், மேலும் TC எப்போதாவது தான் வருவார்கள், அன்று ஞாயிற்று கிழமை அதனால் எங்களுக்கு ஒரு குருட்டு நம்பிக்கை TC வரமாட்டார் என்று , ஒரு வழியாக எங்கள் பயணம் முடிந்துவிட்டது , கடைசி நிறுத்தத்திற்கு முன்பே ( முன்னெச்சரிக்கையாக ) இறங்கி விட்டோம் . எதற்கு வம்பு கடைசி நிறுதத்திதில் யாராவது இருந்தால்?????
குறிப்பு : - எனக்கு தெரிந்த srilanka நண்பர் ஒருவர் எப்போதும் டிக்கெட் பஞ்ச் செய்வதில்லையாம் என்னிடம் மிகவும் பெருமை பட்டுக்கொண்டார்!!!!!!!!!!!!
சத்தியமாக நான் அன்று தவிர மற்ற நாட்களில் கண்டிப்பாக டிக்கெட் இல்லமல் பயணம் செய்ததில்லை (Punch - செய்துவிட்டுத்தான்).
உங்களுக்கு தைரியம் இருந்தால் O.C பயணம் ரொம்ப Easy.
எதற்கும் TC மேல் ஒரு கண் இருக்க வேண்டும்.
பின்குறிப்பு :- இங்கு உள்ள பேருந்துகளில் கெட்ட வார்த்தைகள் நிறைய பாத்தேன் - தமிழில் தான் ( நம்மவர்கள் எங்கு சென்றாலும் - இதை விடுவதில்லை ) இங்கு உள்ளவர்களுக்கு புரியாது என்பதால் அவர்களையே கேட்ட வார்த்தைகளில் திட்டி எழுதி உள்ளார்கள் நம் ஈழ தமிழர்கள் .
...........இவர்கள் எப்போது திருந்துவார்களோ ............
தனா.
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment